🔸 பங்குனி உத்திரத்தின் சிறப்பு 🔸
பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் பல தெய்விக திருக்கல்யாணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. குறிப்பாக, முருகன் - தேவசேனா - வள்ளி திருக்கல்யாணம், பரமேஸ்வரன் - பார்வதி திருக்கல்யாணம், ராமர் - சீதா கல்யாணம் ஆகியவை இந்த நாளில் நிகழ்ந்தவை. இது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. மேலும், இது ஐயப்பனின் ஜெயந்தி மற்றும் மகாலட்சுமி தோன்றிய நாளாகவும் கருதப்படுகிறது
முருகனின் திருமன திருவிழாவில் கலந்து கொண்டு தெய்வத்தின் அருள் பெற அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். உங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு, முருகப் பெருமானின் பேரருளைப் பெறுமாறு வேண்டுகிறோம். 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வீர வேல் முருகனுக்கு அரோகரா!
சக்தி வேல் முருகனுக்கு அரோகரா!
ஞான வேல் முருகனுக்கு அரோகரா!
செல்வ முத்து குமர குருபரனுக்கு அரோகரா!
ஶ்ரீ வள்ளி தேவசேனா காந்தஸ்மரனே - ஹர ஹர சுப்பிரமணியோம்!
🙏 வாழ்க முருகன் திருவருள்! 🙏
– அட்லாண்டா திருப்புகழ் சபை, Georgia, USA